கபிலர்மலை அருகே ரூ.4 லட்சம் மதிப்பு நகை திருட்டு: போலீசார் விசாரணை

பைல் படம்.
பரமத்திவேலூர், கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுப்பிரியா (29). இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் அவர் தனது குழந்தைகளுடன் கணவரின் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு விஷ்ணுபிரியா உட்பட அனைவரும் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பீரோவை திறக்கும் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து பார்ப்பதற்குள் மர்மநபர் கதவை திறந்து வெளியே ஓடினர்.
இதையடுத்து விஷ்ணுப் பிரியா திறந்து கிடந்த பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் தங்க நகை மற்றும் 100 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
இதுகுறித்து அவர் பரமத்தி போலீஸ் நிலையத் தில் புகார் செய்தார். இதையொட்டி போலீசார் தடயவியல் நிபுணர்கள் மூலம் கைரேகை மாதிரிகளை சேகரித்தனர். மேலும் இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு மேலும் இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu