பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள்
பரமத்திவேலூர் லாரி உரிமையாளர்கள் சங்க மகாசபைக் கூட்டத்தில், தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சன்முகப்பா பேசினார். அருகில் ப.வேலூர் எம்எல்ஏ சேகர்.
பரமத்தி வேலூர் தாலுக்கா லாரி உரிமையாளா?கள் சங்கத்தின் 32-ஆவது மகாசபை கூட்டம், அதன் தலைவரும், மாநில சம்மேளன துணைத்தலைவருமா ராஜூ தலைமையில் நடைபெற்றது. உப தலைவர் சக்திவேல் வரவேற்றார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் சண்முகப்பா, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி, பரமத்தி வேலூர் எம்எல்ஏ சேகர், மாநில சம்மேளன முன்னாள் தலைவர் நல்லதம்பி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சம்மேளன (சிம்டா) பொதுச் செயலாளருமான சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பாஜக ஆளும் மாநிலங்களில் டீசல் விலை குறைக்கப்படுகிறது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் விலை குறைக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. பாஜக அல்லாத மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்தால்தான் லாரித் தொழிலை லாபகரமாக நடத்த முடியும்.
டீசல், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்காததால், ஏராளமான கனரக வானகங்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று டீசல் பிடித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நெடுஞ்சாõலைகளில் உள்ள, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.
ஜிஎஸ்டி வரி செலுத்தப்பட்ட சரக்குகளை, லாரிகளில் ஒளிவு மறைவின்றி எடுத்துச் செல்லப்படுவதால் வாழியில் ஆர்டிஓ, போலீசார் அமைத்துள்ள சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும். கொரோனா காலத்தில் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். லாரி உரிமையாளர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். இது குறித்து போக்குவரத்து அமைச்சர் தமிழக முதல்வரிடம் எடுத்து கூறி சுமூக தீர்வை ஏற்படுத்தி தருவார் என நம்புகிறோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu