வில்லிபாளையம் பகுதியில் நாளை மின்சாரத்தடை

வில்லிபாளையம் பகுதியில் நாளை மின்சாரத்தடை
X
பராமரிப்பு பணி நடைபெறுவதால், வில்லிபாளையம் பகுதியில் நாளை மின்சாரம் தடைசெய்யப்படுகிறது.

இது குறித்து பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பரமத்தி வேலூர் தாலுக்கா, வில்லிபாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, நாளை 27ம் தேதி காலை 9 மணி முதல், மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.

இதனால், வில்லிபாளையம், ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்கக்காரன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியாகவுண்டம்பளையம், தம்மங்காளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழக்கடை, கஜேந்திரநகர், சுண்டக்காம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு