நாமக்கல் அருகே டாஸ்மாக் பாரில் கோழி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல் அருகே டாஸ்மாக் பாரில் கோழி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

நாமக்கல் அருகே டாஸ்மாக் பாரில் திருப்பூரைச் சேர்ந்த கோழி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், கீரம்பூர் அருகே டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவில் இந்தக் கடையின் பின்புறம் அமைந்துள்ள பாரில் ஒருவர் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்த நாள் காலையில் கடை திறக்க வந்துபோது, இதைக்கண்ட கடை சூப்பர்வைசர் பரமத்தி போலீசுக்கு தகவல் அளித்தார். அங்கு வந்து போலீசார் தூக்கில் பிணமாக தொங்கியவரின் உடலை மீட்டு, ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பாரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டவர் திருப்பூர் மாவட்டம் சொர்ணபுரி லே-அவுட் ,கோம்பை தோட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் ( 45) என்பதும், கோழி வியாபாரியான அவர், வியாபாரத்துக்காக கோழிகளை வாங்கிச் செல்ல, நாமக்கல் வந்ததும் தெரியவந்தது.

மேலும் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!