ப.வேலூர் பேரூராட்சியில் வாக்குச்சாவடி மாற்றம்: 2வது வார்டில் தேர்தல் புறக்கணிப்பு

ப.வேலூர் பேரூராட்சியில் வாக்குச்சாவடி மாற்றம்: 2வது வார்டில் தேர்தல் புறக்கணிப்பு
X

பரமத்திவேலூர் டவுன் பஞ்சாயத்து, குப்புச்சிபாளையம் 2வது வார்டு பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்து கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை பரமத்திவேலூர் பேரூராட்சி 2வது வார்டு மக்கள் புறக்கணிப்பு செய்தும், கறுப்புக் கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டபோது 3வது வார்டில் இருந்த பகுதிகள் 2வது வார்டுக்கு மாற்றப்பட்டது. தவிர, வார்டுக்கு உட்பட்ட ராஜாநகருக்கான வாக்குச்சாவடி 3 கி.மீ. தூரம் தள்ளி அமைக்கப்பட்டது. இதனால், ராஜாநகர் பகுதி மக்கள் தேர்தல் சமயங்களில் நீண்ட தூரம் சென்று வாக்களித்து திரும்ப வேண்டிய சூழ்நிலை உருவானது.

இப்பிரச்சனைக்கு தீர்வுகண்டு பழையபடியே 2வது வார்டு வாக்குச்சாவடியை அமைக்கும்படி சம்மந்தப்பட்ட ராஜாநகர் பொதுமக்கள் ஏற்கனவே டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலரிடம் நேரில் சென்று மனு அளித்து கோரிக்கை விடுத்திந்தனர். இது குறித்து, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ராஜாநகரைச் சேர்ந்த பொதுமக்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

இதன்படி இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப்பதிதை குப்புச்சிபாளையம், 2வது வார்டு ராஜாநகர் பொது மக்கள் புறக்கணித்து ஓட்டுப்போட செல்லவில்லை. மேலும், அவர்கள் வீடுகளில் கறுப்புக் கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், வாக்குச்சாவடியை மாற்றினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் எனக் கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!