ஏலச்சந்தையில் வெல்லம் விலை உயர்வு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..!

ஏலச்சந்தையில் வெல்லம் விலை உயர்வு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..!
X
பிலிக்கல்பாளையம் ஏலச்சந்தையில் வெல்லம் விலை உயர்வால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பிலிக்கல்பாளையம் ஏலச்சந்தையில், வெல்லம் விலை உயர்ந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், பாலப்பட்டி, மோகனூர், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துவருகின்றனர்.

இந்த பகுதிகளில் விளையும் கரும்பை, ஜேடர்பாளையம், பிலிக்கப்பாளையம், கபிலர்மலை பகுதிகளைச் சேர்ந்த வெல்ல ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஏலத்தில் கலந்துகொண்டு வெல்லத்தை கொள்முதல் செய்கின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,180 வரை ஏலம் போனது. இந்த வாரம் சிப்பம் ஒன்றுக்கு ரூ.1,220 வரை ஏலம் போனது. வெல்லம் விலை உயர்ந்துள்ளதால், வெல்லம் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!