தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி -முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார்
ப.வேலூர் பகுதி டவுன் பஞ்சாயத்துக்களில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி, எம்எல்ஏ சேகர் ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.
பரமத்திவேலூர் சட்டசபை தொகுதியில் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் எம்எல்ஏ சேகர் ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.
பரமத்திவேலூர் தாலுகாவில், கொரோனா தொற்று பாதிப்புள்ளானவர்களின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் ரோடுகள், தெருக்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் ஈடுபடும் வெங்கரை, பரமத்தி, பொத்தனூர், பாண்டமங்கலம், பரமத்திவேலூர் ஆகிய 5 டவுன் பஞ்சாயத்துக்களை சேர்ந்த முன்களப்பணியாளர்களான தூய்மைப்பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரிசி,பருப்பு, மளிகைப்பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் பாதுகாப்பு கவச உடைகள், மாஸ்க், கையுறை போன்றவற்றை முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ, ப.வேலூர் எம்எல்ஏ சேகர் ஆகியோர் வழங்கினார்கள்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவது:
அ.தி.மு.க அரசு ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.கொரோனோவை எதிர்த்து போராடிவரும் இந்த காலகட்டத்தில் அதற்காக முழுவீச்சில் பணியாற்றிவரும் முன்களப்பணியாளர்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுகஅகு மாவட்ட அதிமுக சார்பில் 6 தொகுதிகளிலும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிபாளையம்,குமாரபாளையம் மற்றும் பரமத்திவேலூர் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளோம்.மேலும் மருத்துவ உபகரணங்கள் தேவைப்பட்டால் அதற்கும் ஏற்பாடு செய்து தர தயாராக உள்ளோம்.கொரோனோவின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகமாகியுள்ள சூழலில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அதிமுக செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்திற்கு தடுப்பூசிகள் குறைவாகவே வந்துள்ளன. மேலும் அதிகப்படுத்த வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சரிடம் நானும், ப.வேலூர் எம்எல்ஏ சேகரும் மனு கொடுத்துள்ளோம். நாமக்கல் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகமாகியுள்ளதால் அதற்கு தேவையான மருந்துகளையும் கேட்டுள்ளோம் என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu