பரமத்திவேலூர் அருகே கிராம மக்கள் சார்பில் பனை விதைகள் நடவு

பரமத்திவேலூர் அருகே கிராம  மக்கள் சார்பில் பனை விதைகள் நடவு
X

பைல் படம்

இப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அழித்துவிட்டு பனை விதைகள நடவு செய்ய மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

பரமத்திவேலூர் அருகே கிராம பொதுமக்கள் ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர்.

பரமத்தி வேலூர் தாலுகா, சின்னகரசப்பாளையம் கிராமத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்த மான 170 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரிக் கரையை வலுப்படுத்தவும், நிலத்தடி நீரை சேமிக்கவும், மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன் சீமைக்கருவேல மரங்களை அகற்றப்பட்டது.இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த மாணவர் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றினைந்து பனை விதைகளை நடவு செய்து வருகின்றனர்.

இது குறித்து மாணவர் மன்றத்தினர் கூறியதாவது: எங்கள் கிராம சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்றிணைந்து பனை விதை நடவு பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் கிராமத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனைவிதைகளை நடவு செய்துள்ளோம். இதற்குத் தேவையான பனை விதைகளை நாங்களே சேகரித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அழித்துவிட்டு பனை விதைகள நடவு செய்ய மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!