பரமத்திவேலூர் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் காவிரியில் விசர்ஜனம்

பரமத்திவேலூர் இந்து முன்னணி சார்பில்  விநாயகர் சிலைகள் காவிரியில் விசர்ஜனம்
X

பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோயில் அருகே காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.

பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சார்பில் 25க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

பரமத்தி வேலூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்தி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பல்வேறு இடங்களில் வைத்து பூஜை செய்யப்படும் விநாயகர் சிலைகள் அனைத்தும், 5ஆம் நாள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோயில் அருகே காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படும்.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலங்கள் நடத்தவும், கூட்டமாக சென்று கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதையொட்டி பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில், இந்து முன்னணி சார்பில் மாவட்ட இந்து முன்னணி பொருளாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் வைக்கப்பட்ட 25 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தனித்தனியாக பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் கோயில் அருகே எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் தனித்தனியாக ஆற்றுக்குள் எடுத்துச்செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரமத்தி வேலூர் டிஎஸ்பி., ராஜாரணவீரன் தலைமையில் திரளான போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!