பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் கொப்பரைத் தேங்காயம் விலை உயர்வு
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் தேசிய எலக்ட்ரானிக் வேளாண்மை மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல், பரமத்திவேலூர், மோகனூர், ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தேங்காய் கொப்பரைகளை கொண்டுவந்து மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனர்.
வெங்கமேடு எலக்ட்ரானிக் வேளாண்மை மார்க்கெட்டில் தரத்திற்கு ஏற்ப கொப்பரை தேங்காயின் விலை மறைமுக ஏலத்தின் மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் 27,246 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வந்திதருந்தனர். அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 101.60 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 93 க்கும், சராசரியாக ரூ.100.60க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 25,58,024 மதிப்புள்ள கொப்பரை ஏலம் மூலம் விற்பனையானது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு, 18,472 கிலோ கொப்பரை தேங்காய் வரத்து வந்தது. ஏலத்தில், அதிகபட்சமாக கிலோ ரூ.103.80க்கும், குறைந்தபட்சமாக ரூ. 93க்கும், சராசரியாக ரூ.103.60க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.18,40,202 மதிப்புள்ள கொப்பரை ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. கொப்பரைக்கு கடந்த வாரத்தை விட கூடுதல் விலை கிடைத்ததால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu