பரமத்தி வேலூரில் கொரோனா கணக்கெடுப்புப் பணி குறித்து கலந்தாய்வு கூட்டம்

பரமத்தி வேலூரில் கொரோனா கணக்கெடுப்புப் பணி குறித்து கலந்தாய்வு கூட்டம்
X


கொரோனா மாதிரி படம்


பரமத்தி வேலூர் பகுதியில் பணிபுரியும் கொரோனா கணக்கெடுப்புப் பணியாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவின்படி, பரமத்திவேலூர் தாலுக்கா, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை டவுன் பஞ்சாயத்துக்களில் பணிபுரியும் கொரோனா கணக்கெடுப்புப் பணியாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், உமாராணி, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காய்ச்சல், சளி, இருமல் மற்றும் இதர உபாதைகள் குறித்த கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளும் களப் பணியாளர்கள் பொதுமக்களை அனுகி தங்களின் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்

என்பது குறித்து கூட்டத்தில் அறிவரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. திரளான பணியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!