பரமத்தி வேலூர் சிவன் கோயில்களில் புரட்டாசி பிரதோஷ வழிபாடு

பரமத்தி வேலூர் சிவன் கோயில்களில்  புரட்டாசி பிரதோஷ வழிபாடு
X

பரமத்தி வேலூர் சிவன்கோயிலில் நடைபெற்ற புரட்டாசி பிரதோஷ விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான்

புரட்டாசி மாத சோமவாரபிரதோஷத்தை முன்னிட்டு பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு


நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சிவன் கோயில்களில் புரட்டாசி பிரதோஷ வழிபாடு

புரட்டாசி பிரதோஷத்தை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதி சிவன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு, பரமத்தி வேலூரில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், பாண்டமங்கலம் புதியகாசி விஸ்வநாதர் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோயில், மாவுரெட்டி பீமேஷ்வரர் கோயில், பில்லூர் விரட்டீஸ்வரர் கோயில், பொத்தனூர் காசி விஸ்வநாதர் கோயில், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் சிவனுக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகள், தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Tags

Next Story
ai and business intelligence