ப.வேலூர் ஏடிஎம் மையத்தில் தீ விபத்து: ஏ.சி இயந்திரம் எரிந்து சேதம்

ப.வேலூர் ஏடிஎம் மையத்தில் தீ விபத்து: ஏ.சி இயந்திரம் எரிந்து சேதம்
X

தீ விபத்தில் சேதமடைந்த ஏ.சி மெஷின்.

பரமத்திவேலூரில் ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏ.சி இயந்திரம் எரிந்து சேதமடைந்தது.

பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகில் தனியார் பேங்கின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி இயந்திரம் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த மையத்தில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. அதைக் கேட்டு, அவ்வழியாக சென்றவர்கள் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறையினர் வருவதற்குள் அக்கம்பக்கத்தினர் ஏ.டி.எம். மையத்தில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு கருவி மூலம் தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர். தீ விபத்தின் போது, ஏடிஎம் மையத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் விரைவாக தீ அணைக்கப்பட்டதால், ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் தப்பியது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!