பரமத்தி தையல் நாயகி அம்பாள் உடனுறை வைத்தியநாதர் கோயில் 15ம் ஆண்டு விழா

பரமத்தி தையல் நாயகி அம்பாள் உடனுறை  வைத்தியநாதர் கோயில் 15ம் ஆண்டு விழா
X

சிறப்பு அலங்காரத்தில் பரமத்தி தையல்நாயகி அம்பாள் உடனுறை வைத்தியநாதர் கோயில்.

Paramathi Velur- நாமக்கல் மாவட்டம் பரமத்தி தையல் நாயகி அம்பாள் உடனுறை வைத்தியநாதர் கோயில் 15ம் ஆண்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

Paramathi Velur- நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் உள்ள தையல்நாயகி அம்பாள் உடனுறை வைத்தியநாதர் கோயிலில் 15-ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

பரமத்தி தையல் நாயகி அம்பாள் உடனுறை வைத்தியநாதர் திருக்கோயில் 15ம் ஆண்டு விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், திருமுறை பாராயணம் மற்றும் பேரொளி வழிபாடு நடைபெற்றது. காலை 10 மணிக்கு திருமுறை வேள்வியும், 12 மணிக்கு தையல் நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாதர் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பரமத்தி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மதியம் 1 மணிக்கு அன்னம் பாலித்தலும், மாலை 6 மணிக்கு அடியார்கள் புடை சூழ, கைலாய வாத்தியங்களுடன் அம்மையப்பர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி தையல்நாயகி அம்பாள் உடனுறை வைத்தியநாதர் கோயில் விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!