பரமத்தியில் கார் மோதி டூ வீலரில் சென்ற விவசாயி பலி

பரமத்தியில் கார் மோதி டூ வீலரில் சென்ற விவசாயி பலி
X
பரமத்தி அருகே, இரு கார் மோதியதால் டூ வீலரில் சென்ற விவசாயி பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி, புதுவளவு பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (60) விவசாயி. சம்பவத்தன்று காலை, இவர் தனது டூ வீலரில், பரமத்தி அருகே உள்ள ஓவியம்பாளையத்திற்கு சென்றார். அவர் கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார்.

அப்போது, காங்கேயத்தில் இருந்து ராசிபுரம் நோக்கி வேகமாகச் சென்ற கார் பழனியப்பன் மீது மோதியது. இந்த விபத்தில், பலத்த படுகாயம் அடைந்த அவரை, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து, பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காங்கயம், பங்களாபுதூரைச் சேர்ந்த கார் டிரைவர் ரஞ்சித் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்