பாண்டமங்கலம் ஸ்ரீபெருமாள் கோயில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பாண்டமங்கலம் ஸ்ரீபெருமாள் கோயில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
X

பாண்டமங்கலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் தேர்த்திருவிழா நிகழ்ச்சியில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

பரமத்திவேலூர் தாலுக்கா, பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பரமத்திவேலூர் தாலுக்கா, பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாண்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற, பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட தலமான பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் தேர்த் திருவிழா ஆண்டுதோறும், தை மாதத்தில் நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிசேக அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் கோயில் கொடிக்கம்பத்தில் திருக்கொடி ஏற்றி வைத்தனர்.

நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கலந்துகொண்டனர். இரவு அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. திருவிழா நிகழ்ச்சியாக வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை தினசரி இரவு 7 மணிக்கு சிம்ம வாகனம், சிறிய திருவடி அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருடசேவை, சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வரும் 7-ஆம் தேதி காலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் திருவீதி உலா வரும். 8-ஆம் தேதி மாலை தீர்த்தவாரியும், இரவு கெஜலட்சுமி வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 9-ஆம் தேதி மாலை திருமஞ்சனமும், இரவு மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், 10-ஆம் தேதி மாலை புஷ்ப யாகமும், 11-ஆம் தேதி இரவு சுவாமி புறப்பாடும் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags

Next Story