பாண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு

பாண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள்  மாணவர்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு
X

முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்.

Ex Student - பாண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள், 45 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து குரூப் படம் எடுத்துக் கொண்டனர்.

Ex Student -நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1976 -77- ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் எஸ். எஸ். எல்.சி (பழைய 11-ம் வகுப்பு) படித்த முன்னாள் மாணவர்கள் 45 வருடங்களுக்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

விழாவிற்கு பாண்டமங்கலம் டவுன் பஞ்சாயத்து தலைவரும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான, டாக்டர் சோமசேகர் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேலு வரவேற்றார்.பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ரங்கசாமி, டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் முருகவேல், கிராமக் கல்விக் குழு தலைவர் கருணாநிதி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மகாமுனி ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினார்கள்.

தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்களுக்கு தற்போது அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.மேலும் 2021-22- ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள், தங்களுக்கு கல்வி கற்று தந்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினர். முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து சுமார் ரூ 3 லட்சம் செலவில் பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சீரணி அரங்கத்தை சீரமைத்து சீரணி அரங்கத்தின் மேற்கூரை அமைத்து அதற்கு கான்கிரீட் தளம் அமைத்துக் கொடுத்தனர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, கட்டித் தழுவி தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுமார் 60க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்