பரமத்திவேலூர் பகுதிகளில் 16ம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு

பரமத்திவேலூர் வட்டாரத்தில் நாளை மறுநாள் 16ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பரமத்திவேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இதனால், ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோவில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.
நல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக 16ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னசாரம் தடை செய்யப்படும். இதனால், நல்லூர், கந்தம்பாளையம், கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, கோதூர், திடுமல் கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் ருக்காது.
வாழவந்தி துணை மின்நிலையத்தில் 16ம் தேதி பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடை செய்யப்படும். இதனால், அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குட்லாம்பாறை, கீழ்சாத்தம்பூர், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசப்பாளையம், சின்ன கரசப்பாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லைக்காட்டூர், தீர்த்தாம்பாளையம், பேட்டப்பாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.
சோழசிராமணி துணை மின்நிலையத்தில் 16ம் தேதி பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடை செய்யப்படும். இதனால், அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழசிராமணி, சுள்ளிபாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன் இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.வலசு உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu