கபிலர்மலை பகுதியில் இயற்கை விவசாய பயிற்சி முகாம்: விவசாயிகள் பங்கேற்பு

கபிலர்மலை வட்டார வேளாண் துறை சார்பில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

பரமத்தி வேலூர், கபிலர்மலை அருகிலுள்ள கருந்தேவம்பாளையத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில், தோட்டக்கலை உதவி இயக்குநர் கார்த்திகா கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார்.

பயிற்சியில் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்தும், இயற்கை பூச்சிவிரட்டிகளான அக்னி அஸ்திரா, பத்து இலை கசாயம், நீமாஸ்திரம், பிரம்மாஸ்திரா ஆகியவற்றைத் தயாரித்து பயன்படுத்துவது, இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகளான பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் கரைசலைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

ஓய்வு பெற்ற வேளாண்மை துணை அலுவலர் மாதேஸ்வரன், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயற்கை உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது, நீர்ப் பற்றாக்குறை காலங்களில் இயற்கை உரங்களினால் மண்ணுக்கு விளையும் நன்மைகள், மூடாக்கு மூலம் களைக் கட்டுப்பாடு, மண்புழு உரப் பயன்பாடு, விவசாயிகள் மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள், விளைபொருட்களை விவசாயிகளே உழவர் நிறுவனம் அமைத்து நேரடியாக விற்பனை செய்வதால் ஏற்படும் நன்மைகள் ஆகியன குறித்து பேசினார்.

முடிவில் தோட்டக்கலை உதவி அலுவலர் சிவமாணிக்கம் நன்றி கூறினார். தோட்டக்கலை உதவி அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட மேலாளர் செல்வக்கண்ணன் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business