/* */

நாமக்கல் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை நாமக்கல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
X

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுகளில் இருந்து மண்புழு தயாரிக்கும் தொட்டியை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டார்.

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை நாமக்கல் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், நடைபெற்று வரும் வளர்ச்சித்தட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊராட்சி ஒன்றியத்தில், கபிலக்குறிச்சி நர்சரிகார்டன், கருப்பனார் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டு அவர்களிடம் உரையாடினார்.

கோப்பணம்பாளையம்பஞ்சாயத்தில் ஊராட்சி, புங்கம்பாளையம் கிராமத்தில் தனியார் விவசாய நிலத்தில் மண் வரப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊரக வேலைத்திட்ட பணிகளை பார்வையிட்டார். உரம்பு பஞ்சாயத்தில், அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் 5,000 செடிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள நர்சரியை பார்வையிட்டார்.

அங்கன்வாடி மைய கட்டிடம், சமுதாய ஊட்டச்சத்து தோட்டம் மற்றும் புங்கம்பாளையத்தில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.54,000 மதிப்பீட்டில், உரக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.39,000 மதிப்பீட்டில் மண்புழு உரக்கொட்டகை அமைக்கப்பட்டு மண்புழு உரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பிஆர்ஓ சீனிவாசன், பிடிஓக்கள் சங்கர், பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 12 Jan 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  3. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  7. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  8. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்