வெல்லம் உற்பத்தி செய்யும்போது அஸ்கா சர்க்கரை கலந்தால் கடும் நடவடிக்கை : உணவுப்பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

வெல்லம் உற்பத்தி செய்யும்போது அஸ்கா  சர்க்கரை கலந்தால் கடும் நடவடிக்கை :   உணவுப்பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை
X
வெல்லம் உற்பத்தி செய்யும்போது அஸ்கா சர்க்கரை கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பரமத்திவேலூர்:

வெல்லம் உற்பத்தி செய்யும்போது அஸ்கா சர்க்கரை கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை சார்பில், பரமத்திவேலூர் தாலுக்கா, பிலிக்கல்பாளையத்தில் வெல்ல உற்பத்தியாளர்கள் மற்றும் வெல்ல ஏலச்சந்தை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலவலர் டாக்டர் அருண் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கூட்டத்தில், அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டுச் சர்க்கரை தயாரிப்பாளர்கள் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி உற்பத்தி செய்ய வேண்டும். கரும்புச் சாறை மட்டுமே பயன்படுத்தி வெல்லம் தயாரிக்க வேண்டும். வெல்ல ஆலைகளில் பணியாற்றும் பணியாளர்கள் உணவுப் பாதுகாப்பு பயிற்சி பெற்று அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அனைத்து வெல்ல உற்பத்தியாளர்களும் தங்களது வெல்ல ஆலைகளில் தயாரிக்கப்படும் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை சுகாதார முறைப்படி தயாரிக்க வேண்டும்.

வெல்ல ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தகுந்த மாஸ்க்குகள் மற்றும் சாக்ஸ் அணிந்து சுத்தம் மற்றும் சுகாதாரமான முறையில் வெல்லம் தயாரிப்பு பணியில் ஈடுபட வேண்டும். பணியாளர்கள் அனைவரும் இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் வெல்லம் தயாரிக்கும் போது வெல்ல ஆலை உரிமையாளர்கள் அஸ்கா சர்க்கரை மற்றும் ரசாயன பொருள்களை பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என என அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture