பரமத்திவேலூர் பகுதியில் பூக்களின் விலை சரிவு; விவசாயிகள் கவலை

பரமத்திவேலூர் பகுதியில் பூக்களின் விலை சரிவு;  விவசாயிகள் கவலை
X

பைல் படம்.

பரமத்தி வேலூர் பகுதியில் பூக்களின் விலை சரிவடைந்ததால் சாகுடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தி வேலூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், ஜேடர்பாளையம் மற்றும் கரூர் மாவட்டத்தின் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு வகையான பூக்களை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் தினசரி பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.

இந்த பூக்களை பரமத்தி, வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பாலப்பட்டி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலம் மூலம் வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி ஒரு கிலோ ரூ. 200-க்கும், சம்பங்கி ரூ. 80-க்கும், அரளி ரூ. 120-க்கும், ரோஜா ரூ. 160-க்கும், முல்லை ரூ. 300க்கும், செவ்வந்தி ரூ. 140க்கும் ஏலம் போனது.

தற்போது, கோயில் விழாக்கள் மற்றும் திருமண விழாக்கள் அதிகம் இல்லாததால், பூக்கள் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை சரிவால் மலர் சாகுபடி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!