பரமத்திவேலூர் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வார விழா

பரமத்திவேலூர் பகுதியில் கொரோனா  விழிப்புணர்வு பிரச்சார வார விழா
X

பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் கடை உரிமையாளர்களிடம் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவல ர் மோகன சுந்தரம் வழங்கினார். அருகில் தாசில்தார் அப்பன்ராஜ்.

பரமத்தி வேலூர் பகுதியில், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர், கொரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்.

கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாரத்தை முன்னிட்டு, பரமத்திவேலூர் பஸ் நிலையப் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தாசில்தார் அப்பன்ராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகனசுந்தரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிப் பேசியதாவது:

பெரியவர்களை விட குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பின் தன்மை குறைவாகவே உள்ளது. எனவே தேவையின்றி பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

அனைவரும் தவறாமல் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வெளியே செல்லும்போது தவறாமல் மாஸ்க் அணிந்து செல்வதுடன், தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து நான்குரோடு, பொத்தனூர், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!