பரமத்திவேலூர் பகுதியில் ஆடிப்பூரம் விழா அம்மன் கோயில்களில் வளையல் அலங்காரம்

பரமத்திவேலூர் பகுதியில் ஆடிப்பூரம் விழா  அம்மன் கோயில்களில் வளையல் அலங்காரம்
X

ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு ப.வேலூர் மகாமாரியம்மனுக்கு வளையல்காப்பு அலங்காரம் நடைபெற்றது.

பரமத்திவேலூர் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்மனுக்கு, வளையல் காப்பு அலங்காரம் நடைபெற்றது.

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதியில் உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்தி வேலூர் மகா மாரியம்மன், பேட்டை புதுமாரியம்மன், பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், எல்லையம்மன், பாலப்பட்டி மாரியம்மன்,வாழவந்தி மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து அம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கோயில்களில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சிறிய கோயில்களில் மட்டும் சமூக இடைவெளியுடன் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!