பரமத்தி அருகே பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
பைல் படம்.
பரமத்திவேலூர் ஊராட்சி ஒன்றியம் கூடச்சேரியில் நடைபெற்ற பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவர் திலகவதி தலைமை வகித்தார். வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், பஞ்சாயத்து தலைவர் சத்யா ஆகியேர் முன்னிலை வகித்தனர்.
வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) பாபு வேளாண்மை திட்டங்கள், பயிர் சாகுபடி பரப்பு குறித்து விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் எனவும், பயிர் இன்சூரன்ஸ் திட்டம் குறித்தும், இடுபொருட்கள் பெற முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் பராம்பரிய நெல் ரகங்கள் அறிமுகம், தேர்வு, விதைநேர்த்தி, அமுத கரைசல், பஞ்சகாவ்யாவின் பயன்கள், தயாரிப்பு முறைகள், ஊட்டமேற்றிய தொழுஉரம், மண்புழு உரம், கலப்புப் பண்ணையம், நாட்டு ரக கால்நடை, கோழி, முயல், மீன் வளர்ப்பு மற்றும் மண்வளத்தை காக்கும் அங்கக மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் உதவி வேளாண்மை அலுவலர் பூபதி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் திரேகப்பிரியா ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu