பரமத்தி அருகே லாரி மோதி கட்டிட தொழிலாளி பலி

பரமத்தி அருகே லாரி மோதி கட்டிட தொழிலாளி பலி
X
பரமத்தியில் லாரி மோதியதால் நடந்து சென்ற கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், பிலிக்கல்பாளையம் கரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (40), கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று அவர் பரமத்தியில் இருந்து கீழ் பரமத்திக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது புகளூரில் இருந்து பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு, பெங்களூர் நோக்கிச் சென்ற லாரி ஒன்று அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பாண்டியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து , கிருஷ்ணகிரி மாவட்டம், மலையாண்டஅள்ளியைச் சேர்ந்த லாரி டிரைவர் கோவிந்தநாதன் (43) என்பவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story