பரமத்தி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்

பரமத்தி அருகே கார் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்
X
பரமத்தி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன், அவரது மகன் செந்தில்குமார் (36). சம்பவத்தன்று இரவு அவர் நாமக்கல் சென்றுவிட்டு மீண்டும் பரமத்திக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் , ஓவியம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைத் தடுமாறி ரோட்டின் ஓரம் பள்ளத்தில் கவிழந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல், தனியார் ஆஸ்பத்திரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!