பரமத்தி ஊராட்சி ஒன்றியப்பகுதியில் திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரேயாசிங்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், பரமத்தி ஊராட்சி ஒன்றியப்பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடப் பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து நடந்தை பஞ்சாயத்தில், பயன்பாடற்ற திறந்த வெளி கிணறு, மழைநீர் சேகரிப்பு கிணறாக மாற்றி அமைக்கப்பட்டு, மழைநீர் சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், நீர்வரும் பாதையில், நீர் தூய்மையாக வருவதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.20,000 மதிப்பீட்டில் வரத்து வாய்க்கால் அமைத்து, வடிகட்டி அமைப்பு நிறுவப்பட்டிருப்பதையும் பார்வையிட்டார்.
குன்னமலை பஞ்சாயது, குன்னமலை சமத்துவபுரத்தில் தெரு விளக்கு வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டார். சமத்துவபுரத்தில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் குடிநீர் குழாய்களை சீரமைக்கவும், விளையாட்டு மைதானம் மற்றும் தெருவிளக்குகளை சீரமைக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
செருக்கலை பஞ்சாயத்தில் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட நீர் வீணாகாமல் கட்டப்படும் சுத்திகரிப்பு அமைப்பினை கலெக்டர் பார்வையிட்டார். டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல், பிஆர்ஓ சீனிவாசன், செயற்பொறியாளர் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu