கழுவாடி பண்டிகையை முன்னிட்டு சிங்கார கருப்பண்ண சாமிக்கு முப்பூசை விழா

கழுவாடி பண்டிகையை முன்னிட்டு சிங்கார கருப்பண்ண சாமிக்கு முப்பூசை விழா
X

கழுவாடி பண்டிகையை முன்னிட்டு, ப.வேலூர் சிங்கார கருப்பண்ண சாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

Karuppasamy Kovil - ஆடி மாத கழுவாடி விழாவை முன்னிட்டு ப.வேலூர் சிங்கார கருப்பண்ண சாமி கோயிலில் முப்பூசை விழா சிறப்பாக நடைபெற்றது.

Karuppasamy Kovil - பரமத்திவேலூர் காவிரி கரையில் பிரசித்தி பெற்ற சிங்கார கருப்பண்ண சாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் கழுவாடி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கழுவாடி விழாவை முன்னிட்டு சிங்கார கருப்பண்ண சாமிக்கு நல்லெண்ணை, பால், தயிர், திருமஞ்சள் உள்ளிட்ட 13 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஆடு மற்றும் கோழிகள் பலியிடப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story