மோகனூர் அருகே சொத்து தகராறில் அக்காவை தாக்கிய தம்பி உட்பட 2 பேர் கைது

மோகனூர் அருகே சொத்து தகராறில் அக்காவை  தாக்கிய தம்பி உட்பட 2 பேர் கைது
X
மோகனூர் அருகே சொத்து தகராறில் அக்காவை தாக்கிய தம்பி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மோகனூர் அருகே உள்ள மாமரத்துபட்டியைச் சேர்ந்தவர் பெரியண்ண கவுண்டர். இவருக்கு பாப்பாயி (68) என்ற மகளும், கந்தசாமி (66) என்ற மகனும் உள்ளனர். பாப்பாயி தன்னுடைய தந்தைக்கு சொந்தமான நிலத்தில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாப்பாயியை வீட்டை காலி செய்து, அந்த இடத்தை தங்களுக்கு தருமாறு அவருடைய தம்பி கந்தசாமி குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர்.

சம்பவத்தன்று, பாப்பாயி வீட்டில் இருந்தபோது கந்தசாமி, அவரது மனைவி லட்சுமி, மகள் செல்வராணி, மருமகன் சுதாகர் மற்றும் உறவினர்கள் ஆயுதங்களுடன் வந்து, வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை தாக்கிவிட்டு, வீட்டில் இருந்து பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

தாக்குதலில் காயம் அடைந்த மூதாட்டி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, மோகனூர் போலீசில் பாப்பாயி புகார் அளித்தார். போலீஸ் எஸ்.ஐ ஓவியா வழக்குப்பதிவு செய்து, நாமக்கல் இ.பி. காலனியை சேர்ந்த சுதாகர், கந்தசாமி ஆகியோரை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள லட்சுமி, செல்வராணி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare products