ப.வேலூர் அருகே மாயமான கல்லூரி மாணவர் ஆற்றில் பிணமாக மீட்பு

ப.வேலூர் அருகே மாயமான கல்லூரி மாணவர் ஆற்றில் பிணமாக மீட்பு
X

பைல் படம்.

பரமத்திவேலூர் அருகே மாயமான கல்லூரி மாணவர் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு சிங்காபுரம் லேஅவுட்டை சேர்ந்த பலராமன். இவரது மகன் ஸ்ரீதர் ( 20). கல்லூரி மாணவர். இவர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு வந்தார். இதையடுத்து சேந்தமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவிற்காக, தீர்த்தம் எடுப்பதற்காக ஜேடர்பாளையம் படுகை அணை அருகில் உள்ள காவிரி ஆற்றுக்கு தனது நண்பர்களுடன் வந்தார். அப்போது படுகை அணை காவிரி ஆற்றுப்பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்த ஸ்ரீதர் திடீரென்று மாயமானார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார், நாமக்கல் தீயணைப்பு படை வீரர்கள் இணைந்து காணாமல் போன கல்லூரி மாண வரை தேடினர். பின்னர் இரவு நேரமானதால் தேடுதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அடுத்தநாள் காலை தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் மூலம் ராஜாவாய்க்காலில் மாணவரை தேடினர். பின்னர் ராஜா வாய்க்காலின் படித்துறையின் இறந்த நிலையில் மாணவர் ஸ்ரீதரின் சடலத்தை மீட்டனர். அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!