பரமத்திவேலூர் காவிரி பாலத்தில் மினி வேன் கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
மேம்பாலத்தில் கவிழ்ந்து கிடந்த மினி வேன்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் - கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் இடையே தேசிய நெடுஞ்சாலையில், காவிரி ஆற்றின் குறுக்கே இரட்டை மேம்பாலங்கள் உள்ளன. இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து சர்க்கரை பாரம் ஏற்றிக்கொண்டு மினிவேன் ஒன்று இந்த பாலத்தில் வந்து கொண்டிருந்தது. வண்டியை, குளித்தலை பெரியார் நகரைச் சேர்ந்த டிரைவர் ஈஸ்வரன் (வயது 44) என்பவர் ஓட்டி வந்தார்.
பாலத்தில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் தாறுமாறாக ஓடி தடுப்புச்சுவரில் மோதி நடு ரோட்டில் கவிழ்ந்தது. இதனால் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சலையில் போக்குவரத்து பாதிக்ககப்பட்டது. இருபுறமும் சுமார் 1 கி.மீ தூரத்திற்கு கார், பஸ், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்த நின்றன.
தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த வேலாயுதம்பாளையம் போலீசார், சாலையின் நடுவே கவிழ்ந்து கிடந்த மினி வேனை கிரேன் மூலம் மீட்டனர். பின்னர் சாலையின்இருபுறமும் நின்றுகொண்டிருந்த வாகனங்களை போலீசார் அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu