ஜேடர்பாளையம் அருகே மணல் லாரி மோதி கூலித் தொழிலாளி பலி

ஜேடர்பாளையம் அருகே மணல் லாரி மோதி கூலித் தொழிலாளி பலி
X

பைல் படம்.

ஜேடர்பாளையம் அருகே மணல் லாரி மோதி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (45) கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு, சாணார்பாளையம் கல்லங்காடு, தங்காயி அம்மன் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செயற்கை மணல் பாரம் ஏற்றி வந்த லாரி அவர் மீது மேதியது. இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய பொன்னுசாமி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!