50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு: பசுமையான நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள்

50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு:  பசுமையான நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள்
X

பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி வணிகவியல்துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில், ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு அறநிலையத் தலைவர் டாக்டர் சோமசுந்தரம் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

ப.வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் பி.காம் படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு நெகிழ்ச்சி சந்திப்பு..!

பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில், 50 ஆண்டுகளுக்கு முன்பு பி.காம் பட்டப்படிப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. பலரும் தங்களின் பசுமையான நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் கந்தசாமி கண்டர் கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. மிகப் பழமையான இந்த கல்லூரி கடந்த 1966ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 1969ம் ஆண்டு முதல் இக்கல்லூரியில் பி.காம் பட்ட வகுப்பு துவக்கப்பட்டது. தொடர்ந்து எம்.காம், எம்.பில், பி.எச்டி போன்ற படிப்புகளும் நடைபெற்று வருகிறது. கடந்த 1970ம் ஆண்டு முதல் பி.காம், எம்.காம் உள்ளிட்ட வணிகவியல் படிப்பில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கந்தசாமி கண்டர் அறநியைலத்தலைவர் டாக்டர் சோமசுந்தரம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். வணிகவியல்துறை தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். ஓய்வுபெற்ற பேராசிரியர் சந்திரசேகர் அறிமுக உரையாற்றினார். கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பேராசிரியர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. கடந்த 1969ம் ஆண்டு இக்கல்லூரியில் பி.காம் வகுப்பு தொடங்கப்பட்டபோது, முதல் பேட்ச்சில் மாணவராக சேர்ந்து படித்த நாரயாயணைப் பாராட்டி பரிசளிக்கப்பட்டது.

இக்கல்லூரியில் படித்து மத்திய, மாநில அரசுப்பணிகள், காவல்துறை, வருமான வரித்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, பள்ளி, கல்லூரி ஆசிரியர் பணி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் மாணவர்களும், தற்போது பணியில் உள்ள மாணவ மாணவிகளும், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் தொழில் அதிபர்களும் நேருக்கு நேர் சந்தித்து தங்களின் பசுமையான நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். பலர் தாங்கள் படித்த வகுப்பறைகளுக்கு சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அறநிலைய உறுப்பினர்கள் ஐயப்பன், ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில் சுயநிதிப்பிரிவு வணிகவியல்துறைத் தலைவர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil