பரமத்தி வேலூர் அருகே கார் மோதியதால் டூ வீலரில் சென்றவர் உயிரிழப்பு

பரமத்தி வேலூர் அருகே கார் மோதியதால் டூ வீலரில் சென்றவர் உயிரிழப்பு
X
பரமத்தி வேலூர் அருகே கார் மோதியதால் டூ வீலரில் சென்றவர் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன் (63). கூலித்தொழிலாளி. இவர் நேற்று நாமக்கல்லில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக, உறவினர் விஜயகுமார் என்பவரது டூ வீலரின் பின்னால் அமர்ந்து சென்றார். பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையம் அருகே ரோட்டில் இருந்த வேகத்தடையில் செல்லும்போது, பின்னால் வந்த கார் ஒன்று டூ வீலர் மீது மோதியது. இதனால் டூ வீலரின் பின்னால் அமர்ந்திருந்த முருகேசன் கீழே விழுந்தார், அப்போது பின்னால் வந்த கார் அவர் மீது ஏறியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு செல்லும்வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ப.வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்