/* */

பரமத்திவேலூரில் மகா மாரியம்மன் கோயில் பாலாபிஷேக விழா

பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோயில் பங்குனி விழாவில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பரமத்திவேலூரில் மகா மாரியம்மன் கோயில் பாலாபிஷேக விழா
X

பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோயில் பங்குனி விழாவில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பாலாபிஷேக விழா நடைபெறும். இந்த ஆண்டு மகா மாரியம்மன் கோயிலில் பாலாபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்கள் மற்றும் பால் குடங்களுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்னர் மகா மாரியம்மனுக்கு பால் மற்றும் புனித தீர்த்தங்களால் அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மகா மாரியம்மன் கோவில் பால்குட அபிஷேக விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Updated On: 11 April 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  2. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  3. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  4. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  5. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  6. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  10. லைஃப்ஸ்டைல்
    50 அழகிய மேற்கோள்களுடன் ரமலான் வாழ்த்துக்கள்!