பரமத்திவேலூர் அருகே ரிக் வண்டி தொழிலாளி தற்கொலை

பரமத்திவேலூர் அருகே ரிக் வண்டி  தொழிலாளி தற்கொலை
X
பரமத்திவேலூர் அருகே, குடும்பத்தகராறு காரனமாக விரக்தியடைந்த ரிக் வண்டி தொழிலாளி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

பரமத்திவேலூர் அருகே நல்லூர் கந்தம்பாளையம், கவுண்டிபாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் கணேசன் (42). இவர் போர்வெல் அமைக்கும் ரிக் இயந்திர வாகனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அமுதா (41). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக, அமுதா தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, கணேசன் தனது மனைவியை குடும்பம் நடத்த வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அமுதா, கணேசனுடன் வர மறுத்துவிட்டார். இதனால் விரக்தியடைந்த கணேசன், சம்பவத்தன்று கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில், உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

எனினும், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார். இது குறித்து, நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!