பரமத்திவேலூர் அருகே லாரி டிரைவர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை

பரமத்திவேலூர் அருகே லாரி டிரைவர்  மர்ம மரணம் - போலீசார் விசாரணை
X
பரமத்திவேலூர் அருகே, லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் சந்தானம் (51), லாரி டிரைவர். இவர் லாரியில் இருந்து கீழே இறங்கும்போது காலில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் சிகிச்சை அளித்தும், காயம் ஆறாமல் அவதிப்பட்டு வந்த சந்தானம் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று சந்தானம் வீட்டில் இறந்து கிடப்பதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூக்கில் நுரை தள்ளியவாறு இறந்து கிடந்த, சந்தானத்தின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!