ஜேடர்பாளையம் அருகே கருப்பண்ணசாமி கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

ஜேடர்பாளையம் அருகே கருப்பண்ணசாமி கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
X
Tamil Nadu Temple News - ஜேடர்பாளையம் அருகே கருப்பண்ணசாமி கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு நடந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Tamil Nadu Temple News - நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே சேளூர் சாணார்பாளையம் கள்ளாங்காடு பகுதியில் கருப்பண்ண சாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் வழக்கம் போல் பூஜைகள் செய்து பூட்டி விட்டு பூசாரி சென்று விட்டார். அடுத்த நாள் காலை சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், கோயிலில் உள்ள இரும்பு உண்டியலின் மேற்பகுதி உடைக்கப்பட்டிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பூசாரிக்கு தகவல் கொடுத்தனர். கோயில் உண்டியலில் திருட்டுப்போன பணம் குறித்த விபரம் தெரியவில்லை. அங்குவந்த பூசாரி இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

அதே இரவில், சேளூர் சாணார்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 47 அடி உயரமுள்ள முனியப்பன் கோயில் உண்டியலையும் மர்ம நபர்கள் உடைக்க முயன்றுள்ளனர். அந்த உண்டியலை உடைக்க முடியாதததால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் கோயில் முன்பு இருந்த வேல் ஒன்றை சேதப்படுத்திவிட்டு சென்றுவிட்டனர். ஒரே இரவில் இரண்டு கோயில்களில் நடைபெற்ற உண்டியில் திருட்டு சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவங்கள் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!