கந்தம்பாளையம் அருகே டூ வீலர் விபத்தில் குடிநீர் வாரிய அலுவலர் பலி

கந்தம்பாளையம் அருகே டூ வீலர் விபத்தில் குடிநீர் வாரிய அலுவலர் பலி
X
கந்தம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில், குடிநீர் வாரிய அலுவலர் உயிரிழந்தார்.

நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்தவர் சத்தியசீலன் (42). தமிழ்நாடு குடிநீர் வாரியத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், சுஷ்மிதா, திவ்யதர்சினி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர் சம்பவத்தன்று, கந்தம்பாளையத்தில் உறவினர் ஒருவர் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சிக்காக டூ வீலரில் சென்றார்.

பின்னர் அங்கிருந்து இரவு டூ வீலரில் நாமக்கல் திரும்பி வந்து கொண்டிருந்தார். கந்தம்பாளையம் பெருமாப்பட்டி அருகே வந்தபோது, திடீரென்று மோட்டார் சைக்களில் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது. இதனால் கீழே விழுந்து படுகாயம் அடைந்த சத்தியசீலன், அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!