ஜேடர்பாளையம் அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு: 3 பேருக்கு போலீஸ் வலை

ஜேடர்பாளையம் அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு: 3 பேருக்கு போலீஸ் வலை
X

பைல் படம்.

ஜேடர்பாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தங்க நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி பாப்பாத்தி (60). சம்பவத்தன்று இரவு சுப்பிரமணி ஜேடர்பாளையத்தில் உள்ள கடைக்கு சென்றுவிட்டார். பாப்பாத்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அங்கு 3 மர்ம நபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பாப்பாத்தி அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரத்தை பறித்து கொண்டு மேலும் நகைகள் இருக்கிறதா என கேட்டு மிரட்டினர். நகையோ, பணமோ எதுவும் கிடைக்காததால் ஒரு பவுன் மோதிரத்தை மட்டும் பாப்பாத்தியிடம் இருந்து பறித்துக் கொண்டு 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து பாப்பாத்தி ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் மோதிரத்தை பறித்துச் சென்ற 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare products