காவிரி வெள்ளப்பெருக்கால் ஜேடர்பாளையம் அருகே வீடுகளை சூழ்ந்த தண்ணீர்

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஜேடார் பாளையம் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
Flood News Today- மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள சோழசிராமணி, அரசம்பாளையம் குடித்தெரு ஆகிய பகுதிகளில் காவிரி வெள்ள நீர் 7 வீடுகளில் புகுந்தது.
அங்கு வசித்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வருவாய்த் துறையினர் வழங்கி வருகின்றனர். மேலும்காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரபகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீஸ் டி.எஸ்.பி. கலையரசன், தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று அறிவுறுத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu