பரமத்திவேலூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர் இருவர் பலி

பரமத்திவேலூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர் இருவர் பலி
X
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் இருவர் பலியாகினர். படகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் மதுரை வீரன் கோவில் தெருவில் வசித்து வரும் கயல்விழிக்கு என்பவருக்கு சொந்தமான பழைய வீட்டை புதுப்பிக்கும் நடைபெற்றது. இந்த பணியில் 3 கட்டிட மேஸ்திரி, 3 தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது ஹலோ பிரிக்ஸ் கல்லால் 6 அடி உயரத்திற்கு மேல் கட்டப்பட்டு இருந்த சுவரின் மேல் சிலாப் அமைக்கப்பட்டிருந்தது. அதன் பாரம் தாங்காமல் சுவர் இடிந்து விழுந்தது. இதில் கட்டுமான பணியாளர்கள் 6 பேர் சிக்கிக்கொண்டனர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து கட்டிட இடிப்பாட்டிற்குள் சிக்கிக்கொண்ட 6 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாதேஸ்வரன் (50), அஞ்சலையம்மாள் (65 ) ஆகிய இருவரும் இறந்தனர்..

படுகாயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து. வருகின்றனர் வீடு கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த இச்சம்பவம் பொத்தனூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!