மனைவியை பிரிந்த விரக்தியில் கணவர் தூக்கிட்டு தற்கொலை

மனைவியை பிரிந்த விரக்தியில் கணவர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (47). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி காஞ்சனா (39). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில், காஞ்சனா கோபித்துக்கொண்டு கணவரைப்பிரிந்து குழந்தைகளுடன் எல்லைக்காட்டூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் பிரிந்துசென்ற மனைவி 2 மாதமாக திரும்பி வராததால் விரக்தியடைந்த சரவணன், சம்பவத்தன்று காலை, குச்சிபாளையம் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல்கிடைத்ததும், பரமத்திவேலூர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்