/* */

பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூர் பகுதியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
X

பைல் படம்

பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் பூக்களை பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், புகளூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் இந்த மார்க்கெட்டிள் பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ஒரு கிலோ ரூ.240-க்கும், சம்பங்கி கிலோ ரூ.60-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா ரூ.160-க்கும், முல்லை பூ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது.

இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.450-க்கும், சம்பங்கி ரூ.140-க்கும், அரளி ரூ.340-க்கும், ரோஜா ரூ.250-க்கும், முல்லை பூ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.240-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் ஏலம் போனது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 14 April 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  6. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  7. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  10. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு