பூக்கள் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

பூக்கள் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
X

மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பூக்கள்.

ஆடிப்பண்டிகையை முன்னிட்டு பரமத்தி வேலூர் ஏல மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் தினசரி பூக்கள் ஏல மார்கெட் நடைபெற்று வருகிறது. பரமத்தி, வேலூர், கபிலர்மலை,ஜேடர்பாளையம், பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் சாகுபடி விவசாயிகள் இங்கு தினசரி பூக்களை கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர்.

பரமத்தி வேலூர் பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், ஒரு கிலோ குண்டுமல்லி ரூ. 250, சம்பங்கி ரூ. 50, அரளி ரூ. 80, ரோஜா ரூ. 160, முல்லைப்பூ ரூ. 200, செவ்வந்தி ரூ. 150- க்கும் விற்பனையானது.

இந்நிலையில், ஆடிப் பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஏலத்தில், ஒரு கிலோ குண்டுமல்லி ரூ. 500, சம்பங்கி ரூ. 100, அரளி ரூ. 150, ரோஜா ரூ. 200, முல்லைப்பூ ரூ. 450, செவ்வந்தி ரூ. 200- க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயர்வால் மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!