பிலிக்கல்பாளையம் அருகே வெல்லம் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

பிலிக்கல்பாளையம் அருகே வெல்லம் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
X

பைல் படம்.

பிலிக்கல்பாளையம் அருகே வெல்லம் தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கரும்பு சக்கை எரிந்து சேதமானது.

பரமத்திவேலூர் தாலுக்கா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் தனது தோட்டத்தில் வெல்லம் தயாரிப்பு ஆலை அமைத்து கரும்பில் இருந்து வெல்லம் தயாரித்து வருகிறார். கரும்பு ஆலைக்கொட்டகையில் வெல்லம் தயாரிக்கும் பணிக்காக கரும்புச் சக்கைகளை அடுக்கி போர் வைத்திருந்தார். சம்பவத்தன்று இரவு கரும்புச்சக்கையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். தகவல் கிடைத்ததும், நாமக்கல் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த தீவிபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கரும்பு சக்கைகள் எரிந்து சேதமானது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!