ப.வேலூர் அருகே தீ விபத்து: ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கரும்புகள் சேதம்

ப.வேலூர் அருகே தீ விபத்து: ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கரும்புகள் சேதம்
X

பைல் படம்.

பரமத்தி வேலூர் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கரும்பு எரிந்து சேதமானது.

பரமத்தி வேலூர் தாலுக்கா, பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (63), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். சம்பவத்தன்று கரும்பு தோட்டத்தில் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அருகில் இருந்துவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். இதுகுறித்து திருச்சி மாவட்டம் வேலாயுதம்பாளையம், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கரும்பு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்து, தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கரும்பு தீயில் எரிந்து சேதமானது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!