ப.வேலூர்: லாரியில் கடத்தப்பட்ட 70 ஆயிரம் லிட்டர் போலி டீசல் பறிமுதல்

சித்தரிப்புக்காட்சி
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஐஜி ஆபாஷ்குமார், மண்டல எஸ்.பி. ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின் பேரில், கோவை உட்கோட்ட டி.எஸ்.பி கிருஷ்ணன் தலைமையில். சேலம் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நாமக்கல் எஸ்ஐ அகிலன், எஸ்எஸ்ஐ சத்தியபிரபு மற்றும் பறக்கும் படை தனித்துணை தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர், ப.வேலூர் அருகில் உள்ள தேவனம்பாளையம் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், எவ்வித லைசென்ஸ் மற்றும் ஆவணம் இல்லாமல், சட்டவிரோதமாக 70 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பயோ டீசல் என்ற பெயரில் போலி டீசலை விற்பனைக்கு கொண்டு சென்ற லாரியையும், 70 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கலப்பட டீசலை கடத்திய லாரி உரிமையாளர் திருச்செங்கோட்டை சேர்ந்த மதிவாணன் (62) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu