திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு எதிரொலி: பரமத்தி அருகே தரைப்பாலம் ஆய்வு

திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு எதிரொலி:  பரமத்தி அருகே தரைப்பாலம் ஆய்வு
X

பரமத்தி அருகே தரைப்பாலத்தை ஒட்டி தண்ணீர் செல்வதை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்மழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, பரமத்தி அருகே உள்ள பாலத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள தரைப்பாலத்தை ஒட்டி தண்ணீர் செல்கிறது. இதையொட்டி அப்பகுதியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடைப்புகளைச் சரி செய்து, தரைப்பாலத்தின் இரு பகுதிகளிலும் எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். செருக்கலையில் ஆரம்பித்து இடும்பன்குளம் வரை ராமதேவம் பஞ்சாயத்து வழியாக திருமணிமுத்தாறு செல்லும் வழியில் உள்ள தரைபாலத்தில், மழை காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, தண்ணீர் பாலத்தின் மேல் செல்லாமல் இருக்க நீர்வரத்து செல்லும் வழியில் உள்ள அடைப்புகளைச் சரி செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது பரமத்தி தாசில்தார் அப்பன்ராஜ், பரமத்தி பிடிஓ., அசோகன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்